தங்கப்பாண்டி ஜீவானந்தம், கூமாப்பட்டி கிராமத்தைப் பற்றிய தனது வீடியோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமானார். அவரது வீடியோக்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது மட்டுமல்லாமல், அவருக்கு விளம்பர வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன.
சமூக வலைதளங்களில் எந்த ஒரு சாதாரண விஷயமும் சில சமயங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு சில வாரங்களுக்கு முன்பு, தேனி மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி கிராமத்தை உலகறியச் செய்தவர் தங்கப்பாண்டி ஜீவானந்தம். “ஏங்க… எங்க கூமாப்பட்டிய பாருங்க” என்று அவர் பேசிய வீடியோக்கள், இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்று அவரை “கூமாப்பட்டி நாயகன்” என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
25
கூமாப்பட்டி தங்கபாண்டி
dark_night_tn84 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வந்த தங்கப்பாண்டி, பிளவக்கல் அணை நீருக்குள் நின்று கொண்டு, “ஏங்க… இந்த பக்கம் பார்த்தா அந்தமான் காடு, அந்த பக்கம் பார்த்தா காஷ்மீரு… வாழனும்ங்க…” என்று தனது கிராமத்தின் அழகை உணர்வுபூர்வமாக விவரித்தார்.
இவரது இந்த எதார்த்தமான பேச்சு, இளைஞர்கள் மத்தியில் விரைவாக பரவியது. இதன் விளைவாக, அந்த கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்று பலர் சுற்றுலாப் பயணிகளாக கூமாப்பட்டிக்கு வரத் தொடங்கினர்.
35
கூமாப்பட்டியில் குவிந்த கூட்டம்
ஆனால், அணைப் பகுதிக்கு மக்கள் அதிக அளவில் வரத் தொடங்கியதால், பொதுப்பணித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ரீல்ஸ் எடுத்த தங்கப்பாண்டி உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அணைக்குள் நுழைந்ததாகவும், அவரது ரீல்ஸ்களை நம்பி யாரும் அணைக்கு வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அணைப் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருப்பதால், அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூமாப்பட்டி ரீல்ஸ் மூலம் கிடைத்த பிரபலம், தங்கப்பாண்டியை ஒரு இன்ஸ்டா செலிபிரிட்டியாக மாற்றியுள்ளது. சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். மெரினா கடற்கரையில் நின்று கொண்டு “ஏங்க… சென்னைக்கு வாங்க…” என்று அவர் பேசிய வீடியோவும் வைரலாகியது.
55
தகைக்கடை விளம்பரத்தில் தங்கபாண்டி
சில கடைகளுக்கும், பிரபல நகைக்கடைக்கும் அவர் விளம்பர தூதுவராகவும் மாறியுள்ளார். ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவர், இன்று பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்று பிரபலமடைந்துள்ளதைக் கண்டு சமூக வலைதளங்களில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.