இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணியர் கப்பல் சேவை கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 14ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
24
சிரியாபாணி கப்பல்
துவக்கத்தில், இந்தியக் கப்பல் கழகத்திற்குச் சொந்தமான 'சிரியாபாணி' என்ற கப்பல் இச்சேவையை மேற்கொண்டது. ஆனால், பருவநிலை மாற்றங்கள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக சில நாட்களிலேயே இச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர், இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, 150 பேர் பயணிக்கும் வசதியுள்ள 'சிவகங்கை' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
34
வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்
இந்த நிலையில், நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பன்னாட்டுப் பயணியர் கப்பல் போக்குவரத்துச் சேவையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை வாரத்தின் 6 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த இந்தக் கப்பல் சேவை, இனிமேல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் கப்பல் இயக்கப்படுவதால், பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து மேலும் எளிமையாகும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.