தென்காசி டூ சிவகங்கை.. அடிச்சி வெளுக்கப் போகும் கனமழை.. வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்!

Published : Oct 05, 2025, 04:08 PM IST

தமிழ்நாட்டில் தென்காசி முதல் சிவகங்கை வரை கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
தமிழ்நாட்டில் கனமழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவாலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது.

24
தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

இந்நிலையில், தென்காசி முதல் சிவகங்கை வரை இன்று கனமழை வெளுத்து வாங்க உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அக்டோபர் சிறப்பாக தொடங்கியுள்ளது. மீண்டும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, சேலம், நாமக்கல், விருதுநகர் போன்ற உள் மாவட்டங்கள் மழையில் நனைந்தன. தெற்கில் தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதிகளுக்கு மிகவும் தேவையான மழை கிடைத்தது.

34
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

இன்று மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி போன்ற தென் உள் மாவட்டங்கள் அனைத்தும் நல்ல மழையைப் பெறும். இதேபோல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு, ஈரோடு, நீலகிரிஸ், தருமபுரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி போன்ற பிற உள் மாவட்டங்கள் அனைத்துக்கும் மழை கிடைக்கும்.

சென்னையிலும் நிலைமை நன்றாக உள்ளது. இரவு முதல் காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த போக்கு அக்டோபர் நடுப்பகுதி வரை தொடரும். அதன் பிறகு அக்டோபர் 17-20 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

44
7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

இதேபோல் தமிழகத்தில் இன்று (அக்டோபர் 5) முதல் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேனி, திண்டுக்கல்

6ம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 7ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories