மின் கட்டணம் குறைக்க சூப்பர் சான்ஸ்.! மின்சார வாரியமே கொடுத்த புது ஐடியா.?

First Published | Sep 13, 2024, 11:35 AM IST

தமிழகத்தில் மின் தேவை அதிகரித்து, மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், மின் கட்டணத்தை குறைக்க மின்சார வாரியம் சூப்பர் வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த மானியமும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

TNEB

மி்ன்சார பயன்பாடு

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாளுக்கு நாள் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின்சாரம் இல்லாமல் ஒரு வேளைக்கூட செய்யமுடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். குறிப்பாக சமையல் தொடங்கி அலுவலக வேலை வரை இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது

பல மணி நேரம், பல நாட்கள் மின்சாரம் இல்லையென்றாலும் முன்னர் மக்கள் நிம்மதியாக வாழ முடிந்தது. ஆனால் தற்போது உள்ள கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அடுத்த நிமிடமே மின்சார அலுவலகத்திற்கு போன் செய்து மின்சாரம் எப்போது வரும் என கேட்க தொடங்கி விடுவார்கள். மின்சார பயன்பாட்டை பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் மின் உற்பத்தி

தமிழகத்தின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி வெறும் 4,332 மெகாவாட் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த மின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் மாற்று வழியில் மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காற்றாலை மின்சாரம். சூரிய ஒளி மின்சாரம் என மாற்றப்பட்டுள்ளது.

Tap to resize

senthil balaji tneb bill

மின்சார பயன்பாடு அதிகரிப்பு

இதனிடையே மக்களின் நெருக்கம், அதிகரித்த வாகன உற்பத்தி, தொழிற்சாலை பெருக்கம் போன்ற காரணத்தால் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் 24 மணி நேரமும் ஒரு சில வீடுகளில் ஏசி இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியேற்றப்படும் வெப்பமும் பொதுவெளியில் வெப்பத்தை அதிகரித்துள்ளது, முன்பு ஒரு வீட்டிற்கு மின் கட்டணமாக 500 ரூபாய் வந்த இடத்தில் 5ஆயிரம் ரூபாயும், ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்த இடத்தில் 10 ஆயிரம் ரூபாய் என கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விளக்கு, பேன், ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் போன்றவற்றின் பயன் அதிகரித்துள்ளது.

tneb

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்

இதனால் மின் கட்டணம் வரும் பொழுது ஒரு சிலருக்கு மாரடைப்பே வரும் நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரம் கணக்கிடுவதால் மின்சார கணக்கீட்டின் போது பயன்பாடு அதிகரித்து கட்டணமும் இரண்டு மடங்காக வருகிறது. எனவே மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் மின்கட்டண உயர்வும் அதிகரித்துள்ளது. இதுவும் மின்கட்டணத்தில் வெளிப்படுகிறது. இந்தநிலையில் தான் மின் கட்டணத்தை பெரும் அளவில் குறைக்க சூப்பர் ஐடியாவை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மேற்கூரை சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக விண்ணப்பிகவும் அழைப்பு விடுத்துள்ளது.

TN Government Bus: இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகளுக்கு குஷியான செய்தி! போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!

வீடுகளில் சோலார்

வீடுகளில் சோலார் PV அமைப்புகளை நிறுவுவதால் மின்சார கட்டணம் குறைக்கமுடியும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த வீட்டின் மாடியில் சதுர அடியை பொறுத்து செலவு ஏற்படுகிறது. அந்த வகையில் 50ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை சோலார் அமைக்க தேவைப்படுகிறது. இதனால் வீடுகளுக்கு தேவைப்படும் மின்சாரத்தை எளிதாகவே தயாரிக் கொள்ளலாம்.  

இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மானியமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் 1 கிலோ வாட் சோலர் மின்சாரம் அமைக்க  30,000 ரூபாயும்,  2 கிலோ வாட் சோலார் மின்சாரம் அமைக்க  ரூ 60,000 ஆயிரம் ரூபாயும்  3 கிலோ வாட் சோலார் மின்சாரம் அமைக்க 78,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.  மேற்கூரை சூரியசக்தி மின் மூலம் 10 கிலோ வாட் வரை அமைக்க அனுமதி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1. உங்கள் வீடுகளில் தனியார் அல்லது அரசின் உதவியுடன் மேற்கூரையில் சோலார் அமைக்க வேண்டும். 2. மேற்கூரையில் சோலார் அமைத்தால் வீட்டில் பெரும்பாலும் மின்சார தேவை பூர்த்தி ஆகிவிடும். 3.  வீட்டில் சோலார் அமைத்தால் மின்சார வாரியத்தின் மின்சாரத்தில் 100 யூனிட் கூட அவசியம் இருக்காது. 3. மின்கட்டணத்தை மிச்சப்படுத்துவதுடன், உபரி மின்சாரத்தை டிஸ்காம்களுக்கு விற்பதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் ஈட்ட முடியும். ஒரு 3 கிலோ வாட்  அமைப்பு ஒரு குடும்பத்திற்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு 300 யூனிட்களுக்கு மேல் உற்பத்தி செய்ய முடியும்.
 

விண்ணப்பிப்பது எப்படி.?

இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பதாரர் முதல்வரின் சூரிய கூரை ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். https://tnebltd.gov.in/usrp/applycfa.xhtml அல்லது  https://pmsuryaghar.gov.in ஆகிய லிங்கை கிளிக் செய்து இதை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. 
 

Latest Videos

click me!