Published : Sep 10, 2024, 08:48 AM ISTUpdated : Sep 10, 2024, 09:36 PM IST
இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டு தோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று சுதந்திரப்போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த குருபூஜையில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருவார்கள்.
25
Tamilnadu Police
இதற்கான பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள 82 பள்ளிகளுக்கு நேற்று முதல் செப்டம் 11ம் தேதி வரை (அதாவது நாளை வரை) விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார். குறிப்பிட்ட 82 பள்ளிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
45
ban on rental vehicles
நாளை நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வானகங்களில் வந்து செல்ல அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. மக்களின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்துகளில் மேற்கூரையில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும்.
55
Ramanathapuram District Collector
மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வரவுள்ளதால் அதற்கேற்ப வாகனத்துக்கான முன் அனுமதி பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிய நேரத்தில் அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி வந்து சென்று மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.