Dindigul Husband Murder: திண்டுக்கல் மாவட்டத்தில் கூலித் தொழிலாளி மாரியப்பன் தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார். கழுத்தில் காயங்களுடன் மாரியப்பன் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி(35). இந்நிலையில் இந்நிலையில் பழனியம்மாளுக்கு அதே ஊரைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
24
தகராறு
இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரிய வந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் தங்கள் ஊரில் வீட்டை காலி செய்து நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியில் புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மாரியப்பன் வீட்டில் மயங்கி விழுந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
34
நிலக்கோட்டை அரசு மருத்துவமனை
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாரியப்பனின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் மாரியப்பனின் உடலை பார்த்து சோதனை செய்தனர். அப்போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகத்தின் பேரில் மாரியப்பனின் மனைவி பழனியம்மாளிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து படுகொலை செய்ததை மாரியம்மாள் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பழனியம்மாள் மற்றும் சூர்யாவை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.