Crime: பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32) . டாஸ்மாக் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி (26). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 12ம் தேதி குளத்துப்பட்டியில் சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
24
மனைவி காவல் நிலையத்தில் புகார்
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருப்பதால் உறவினர் வற்புறுத்தலின் பேரில் கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
34
கள்ளக்காதல் விவகாரம்
விசாரணையில் அபிராமிக்கும் அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி பிரபு அபிராமி வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பிரபாகரனை கொலை செய்ய மனைவி அபிராமி மற்றும் பிரபு திட்டமிட்டனர். அதன்படி கடந்த 12ம் தேதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பிரபுவின் நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் ஃபுல் மப்பில் இருந்த அவரை மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு மரத்தடியில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் அபிராமி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரபு நண்பர்களை தேடி வருகின்றனர்.