அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!

Published : Apr 20, 2025, 01:17 PM ISTUpdated : Apr 20, 2025, 01:22 PM IST

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PREV
14
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!
Tamilnadu Government

TN Government Employees: தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே தமிழக அரசின் அடிப்படை விதிமுறைகளில் உள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பணிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை முறையாக அணிவதில்லை.

24
Government employee

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை 

முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அடையாள அட்டையை அணிகின்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட  அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து துறைகளின் உயரதிகாரிகளுக்கு அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது. ஆனால் இதை சரிவர பின்பற்றுவதில்லை. இந்நிலையில் தான் பணியின் போது தமிழக அரசு ஊழியர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!

34
Government Employees ID card

புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலக நேரத்தில் புகைப்பட அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கியுள்ளது. ஏற்கெனவே இதுதொடர்பாக அரசாங்கத்தால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சில துறைகள் மேற்கண்ட வழிமுறைகளை கவனமாக பின்பற்றவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ( Tamil Nadu government employees)

இதையும் படிங்க:  ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசுத் தேர்வுகள் இயக்குநர்!

44
ID card mandatory

நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி எச்சரிக்கை

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஜூலை 7ம் தேதி அளித்த தீர்ப்பில், தமிழ்நாடு அரசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், குறிப்பாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கும், ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என்றால், 60 நாட்களுக்குள் அதனை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும், அடையாள அட்டைகளை அணிவது தொடர்பான விதி கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories