395 ரூபாய் கட்டினால் 5லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு.! தமிழக அரசின் சூப்பர் திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?

First Published | Sep 23, 2024, 8:02 AM IST

தமிழக  பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்பவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 

தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பானது உருவாக்கி கொடுக்கப்படுகிறது. அரசு பணிக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வு நடத்தப்பட்டு பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இது மட்டுமில்லாமல் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பும் உருவாக்கி கொடுக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் ஒரு சில வேலை வாய்ப்பு தொடர்பாக தகவல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில் எலக்ட்ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஈடாக மக்கள் ஓடிக்கொண்டிருகிறார்கள். அந்த வகையில் உள்நாட்டில் குறைந்த சம்பளம் கிடைப்பதால் வெளிநாட்டிற்கு வேலைக்காக மக்கள் படையெடுத்து வருகின்றனர்.  
 

பிழைப்புக்காக வெளிநாட்டில் வேலை

அந்த வகையில் படித்த படிப்பிற்கும், குடும்பத்தின் வறுமைக்காகவும் லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாட்டில் வேலை தேடி செல்கின்றனர். குடும்பத்தை விட்டும், நண்பர்களை விட்டும், கடல் கடந்து செல்பவர்களுக்கு பாலைவனத்திலும், காடுகளிலும் வேலையில் அமர்த்தப்படுகின்றனர். இது மட்டுமில்லாமல் இல்லாமல் கட்டிட கட்டும் பணி, மின்சார பணி என கடினமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது திடீரென ஏற்படும் விபத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் பாதிக்கப்படும் அயலக தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கியுள்ளது. அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம் எனவும் கூறியுள்ளது. 

Latest Videos


அயலக தமிழர்கள் நல வாரியம்

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவர்களை பாதுகாக்கும் வகையில் 18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் இணையதளத்தில் https://nrtamils.tn.gov.in ஒரு முறை பதிவு கட்டணமாக 200 ரூபாய் செலுத்தி வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.

இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆவணங்களாக பாஸ் போர்ட் மற்றும் தகுந்த ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் தமிழர்கள் மற்றும் Emigration Clearance பெறப்பட்டு அயல்நாடு செல்ல உள்ள தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ காப்பீட்டு திட்டம்

அயலக தமிழர்களுக்காக தமிழக அரசு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் காப்பீட்டு தொகை சந்தா (மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை) 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ. 395 + GST, 10 லட்சம் ரூபாய் மருத்து காப்பீட்டிற்கு  ரூ 700 + GST என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும்  தீவிர மற்றும்  தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதன் படி,  விபத்து காப்பீட்டு திட்டத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தி இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புற்றுநோய்ர கிட்னி கோளாறு, ஸ்டோராக், இருதய பிரச்சனை, கோமா உள்ளிட்ட 13 முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளது.  

சந்தா தொகை என்ன தெரியுமா.?

இக்காப்பீடு தீட்டத்தில் கீழ்க்கண்ட சந்தாக்களில் தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் காப்பீட்டு தொகை சந்தா (ஆண்டுக்கு ஒரு முறை)  1,00,000 ரூபாய்க்கு ரூ. 350 + GST,2,00,000 ரூபாய்க்கு - ரூ. 700 + GST,3,00,000 ரூபாய்க்கு - ரூ. 1.050 + GST, 4,00,000 லட்சம் ரூபாய்க்கு  ரூ. 1.400 + GST,5,00,000 ரூபாய்க்கு - ரூ. 1.750 + GST என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போலகல்வி உதவித்தொகை திட்டமும் அயலக தமிழர்களுக்கான நல வாரியத்தில் செயல்படுத்தப்படுகிறது. 

click me!