யார் இந்த சீசிங் ராஜா
செங்கல்பட்டை சேர்ந்த ராஜா, ஆரம்பத்தில் வழிப்பறி குற்றவாளியாக சின்ன, சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்துவது என தொடர்ந்து வந்தவர், படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளி லிஸ்டில் இணைந்தார். தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளது. சீசிங் ராஜா மீது 33 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே சீசிங் ராஜா மீது 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார்.