பொங்கல் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டை பொறுத்தவரை சென்னையில் இருந்து மட்டும் 10லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். அதே போல இந்தாண்டும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வார காலமே பொங்கல் பண்டிகைக்கு உள்ளதால் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு பொங்கல் பண்டிகை கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள்.
பொங்கல் விடுமுறை
எனவே பொங்கல் பண்டிகைகு பொதுமக்கள் வெளியூர் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சொந்த கார்களிலும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையானது இந்தாண்டு ஜனவரி 14, 15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. எனவே பொங்கலுக்கு முந்தைய நாள் திங்கட் கிழமை அதாவது ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை விடப்பட வேண்டும் எனவும், இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
nellai mubarak
ஜனவரி 13 மற்றும் 17ஆம் தேதி விடுமுறை
ஜனவரி 13 மற்றும் 17ஆம் தேதிகளில் விடுமுறை விடப்பட்டால் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் முதலமைச்சருக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக ஜனவரி 14 செவ்வாய் தொடங்கி, ஜனவரி 16 வியாழன் வரை 3 நாட்கள் அரசு விடுமுறை நாளாகும். எனவே இந்த விடுமுறை தினத்துக்கு முந்தைய ஜனவரி 13 திங்கட்கிழமை மற்றும் விடுமுறைக்கு பிந்தைய ஜனவரி 17 வெள்ளிக்கிழமை வேலை நாட்களாக உள்ளன.
koyambedu
கூடுதல் விடுமுறை கோரிக்கை
ஆகவே, ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களையும் சேர்த்து தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதே போல சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆண்டு விடுமுறை பட்டியலில் ஜனவரி 11 முதல் 19 வரை விடுமுறையாக உள்ளது. அதனடிப்படையில் ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய தேதிகளையும் விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர் திருநாள் கொண்டாட்டங்களுக்காக வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
9 நாட்கள் விடுமுறை
ஜனவரி 13 மற்றும் 17 ஆகிய நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்கும் போது, மக்கள் முன்கூட்டியே தங்கள் பயணங்களை எளிய முறையில் திட்டமிட்டு தமிழர் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி சிரமமின்றி மீண்டும் ஊர் திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியூர்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அது வசதியாக இருக்கும் என நெல்லை முபாரக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதே போல இதே போல தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலை நாளாக உள்ளது.
தமிழக அரசின் திட்டம் என்ன.?
அதைத் தொடர்ந்து வரும் 18 மற்றும் 19-ம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே தமிழக அரசு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும்இதனால் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதலான நாள்கள் தங்களது ஊர்களில் தங்கும் நிலை நல்ல சூழல் ஏற்படும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். எனவே பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13 அல்லது ஜனவரி 17 ஆகிய இரு தினங்களில் ஒரு தினம் அரசு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.