தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து அந்தந்த மாவட்டங்களில் பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை அம்மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏதாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும்.
24
ஆடி தபசு விழா
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் ஆலய ஆடி தபசு விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி தபசு திருவிழா ஜூலை 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மொத்தம் 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலையில் கோமதி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழாவின் 9வது நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தேரோட்டமும், ஆடித்தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வு 11வது நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும்.
34
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும்.
இந்த விடுமுறைக்கு ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 23ம் தேதி சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.