Published : Dec 04, 2024, 01:25 PM ISTUpdated : Dec 04, 2024, 02:53 PM IST
School Leave: நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நவம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக நவம்பர் 21ம் தேதி பள்ளிகள் செயல்படும்.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பை காதில் கேட்டாலே அளவு கடந்த சந்தோஷம் தான். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறையானது போதும் போதும் என்ற அளவுக்கு கொட்டி கிடந்தது. காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி என ஒரே மாதத்தில் கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அது மட்டுமில்லாமல் தொடர் விடுமுறைகளும் ஏராளம் வந்தது. ஆனால், நவம்பர் மாதத்தில் போதிய விடுமுறைகள் கிடைக்கவில்லை.
25
Local Holiday
அதுமட்டுமல்லாமல் அரசு விடுமுறைகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 468-வது பெரிய கந்தூரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
45
Nagai School College Holiday
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 11-ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. மறுநாள் 12-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி, நாகை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவங்களுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.