குஷியோ குஷி.! மார்ச் 10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! என்ன காரணம்?

Published : Mar 05, 2026, 11:58 AM IST

ஜனவரி மாதம் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. போதும் போதும் என்ற அளவுக்கு விடுமுறை கொட்டி கிடந்தது. அதாவது அரையாண்டு தேர்வு, பொங்கல் விடுமுறை என வரிசைக்கட்டி வந்தது.

PREV
15
ஜனவரி மாதம் கொண்டாட்டம்

தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான். அதுமட்டுமல்ல தொடர் விடுமுறை வந்துவிட்டால் இரட்டிப்பு குஷியில் துள்ளிக்குதிப்பது வழக்கம். இந்நிலையில் ஜனவரி மாதம் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. போதும் போதும் என்ற அளவுக்கு விடுமுறை கொட்டி கிடந்தது. அதாவது அரையாண்டு தேர்வு, பொங்கல் மற்றும் குடியரசு தின விடுமுறை என வரிசைக்கட்டி வந்தது.

25
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

ஆனால் பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்த்த விடுமுறை கிடைக்காததால் பள்ளி மாணவர்கள் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் மார்ச் மாதம் தேர்வு மாதம் மற்றும் அதிக கோவில் திருவிழாக்களை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வந்த வண்ணம் உள்ளது.

35
விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் மற்றும் தேர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை அளிக்க தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

45
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நாளான மார்ச் 10 செவ்வாய்க்கிழமை அன்று ஒடுக்கு பூஜை நடைமுறை உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாள்

இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories