தூத்துக்குடி மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் வரலாற்று மழை உறுதியாம்! தமிழ்நாடு வெதர்மேன் ஷாக்கிங் நியூஸ்!

Published : Dec 13, 2024, 09:45 AM ISTUpdated : Dec 13, 2024, 10:42 AM IST

Tamil Nadu Weatherman Pradeep John: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது, குறிப்பாக மாஞ்சோலை, மயிலாடுதுறை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

PREV
15
தூத்துக்குடி மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் வரலாற்று மழை உறுதியாம்! தமிழ்நாடு வெதர்மேன் ஷாக்கிங் நியூஸ்!
Northeast Monsoon Tamil Nadu

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்து. 

25
Tamilnadu Rain

இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் 16 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: 24 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

35
Nellai Heavy Rain

இதனையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  அதுமட்டுடமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு கனமழை பெய்ததால் 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

45
tamilnadu weatherman


இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சந்தேகத்திற்கு இடமின்றி, நீண்ட காலமாக தமிழகத்திற்கு பருவமழை மிகக் கடுமையான நாள். கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டத்தை குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. மாஞ்சோலைல  ஊத்து - 500 மிமீ, மயிலாடுதுறை-கடலூர் பெல்ட்டில் 300 மி.மீ., தூத்துக்குடி கோவில்பட்டி 350+ மி.மீ, குற்றாலம் வரலாற்று சிறப்புமிக்க ஓட்டங்களை கண்டது. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்லில் கனமழை பெய்தது. பெரம்பலூர்-அரியலூர் இடையே பரவலாக மழை பெய்தது.

இதையும் படிங்க:  7 நாட்களுக்கு ஏழரையை கூட்டப்போகும் மழை! அதுமட்டுமல்ல இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

55
tamilnadu weatherman pradeep john

மற்றொரு பதிவில் திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் மழை நிற்கவே இல்லை. இந்தப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை மலைப்பகுதியில் வரலாற்று மழையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories