ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் வட கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.
அதன்பிறகு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் பரவாலாக பெய்த நிலையில், நேற்று முன் தினம் முதல் மழை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.