குமரியில் மட்டுமல்ல KTCCயிலும் அடிச்சு குமுறப்போகுதாம்! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை! நாள் குறித்த வெதர்மேன்!

Published : Nov 10, 2025, 01:49 PM IST

Tamilnadu Weatherman: வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 12 முதல் தஞ்சை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

PREV
15
வடகிழக்கு பருவமழை

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பெய்யாமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்நிலையில் வட தமிழகத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இன்று மற்றும் நாளை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

35
தமிழ்நாடு வெதர்மேன்

நவம்பர் 12ம் தேதி முதல் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி கடலோரப் பகுதிகள் வரை நாளைய தினம் மழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

45
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தென் தமிழக மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்யும். வட தமிழகத்தை பொறுத்தவரை, சலனம் மிகவும் வலுவற்ற நிலையில் உள்ளது.

55
டெல்டா மாவட்டங்களில் மழை

எனவே, இன்று மற்றும் நாளை (KTCC) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் கிழக்கு அலை மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி கடலோரப் பகுதிகள் வரை நாளைய தினம் மழை பெய்யலாம். நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து விட்டு, அப்படியே குறைய தொடங்கிவிடும். மீண்டும் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories