தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையா? எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
எந்த ஆண்டும் இல்லாத வகையில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. இதனால், ஏரி, குளங்கள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நீர் மட்டத்தின் அளவும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றாலும் அவ்வப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
26
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இந்நிலையில் வரும் நாட்களில் மழை இருக்கா? இல்லையா? குளிர் எப்படி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
36
மிதமான மழை
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
46
தமிழகத்தில் மழை
பிப்ரவரி 2ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 3 முதல் 6ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
56
பனிமூட்டம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
66
சென்னை பனிமூட்டம்
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.