அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைகிறார்! அதிர்ச்சியில் இபிஎஸ்!
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து வந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார். இவர் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அண்ணாமலையை கடுமையாக விமர்ச்சித்து அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2023ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
25
இதனையடுத்து சிடிஆர் நிர்மல் குமாருக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. எக்ஸ் தள பக்கத்தில் திமுகவுக்கு எதிராக உடனடி பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகியான நிர்மல்குமார் தனது சமூக வலைத்தளத்தில் உள்ள அதிமுக சின்னங்களை திடீரென நீக்கினார். இதனால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல்குமார், பனையூர் தவெக அலுவலகத்திற்கு வருகை தந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
45
ஆதவ் அர்ஜுனா
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகியதை அடுத்து பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் கடந்த புதன்கிழமை 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். தவெகவில் இணைய உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு மாநில துணைத் பதவியும், தேர்தல் சிறப்புப் பிரிவு பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருகை தந்துள்ளார். அவரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்டியணைத்து வரவேற்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட, சிறப்பான பேச்சாளராகவும் நன்கு அறிமுகமான காளியம்மாளும் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தவெகவில் இணையும் பட்சத்தில் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.