Fengal Cyclone
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்ந்து, நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும்.
Tamilnadu Rain
அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Rain News
அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cuddalore School Holiday
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
School College Holiday
ஏற்கனவே கனமழை பெய்து வருவதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.