Published : Nov 26, 2024, 04:52 PM ISTUpdated : Nov 27, 2024, 08:14 AM IST
2025-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகவும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 6 நாட்கள் மற்றும் தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் 2025-ம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில் எத்தனை நாட்கள் பொது விடுமுறை நாட்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ரொம்ப ஆர்வமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசும் பட்டியலை வெளியிட்டது.
25
School Holiday
அதில், 2025ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகவும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு பொது விடுமுறை சனிக்கிழமையும் வருகிறது. அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன. ஒரு மாதத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை கிடையாது உள்ளிட்டவைகள் பள்ளி மாணவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
35
2025 Pongal School Holiday
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 14,15,16 ஆகிய 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது சனி, ஞாயிறு விடுமுறை வந்து விடுகிறது. இடையில் ஜனவரி 13 திங்கள் போகி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் பொங்கல் பண்டிகையை சேர்த்து மொத்தம் 6 நாள் விடுமுறை கிடைக்கும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாள் விடுமுறை என்பதை பார்ப்போம். அதாவது கடந்த தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைத்தை போல அடுத்த ஆண்டு அதாவது 2025 தீபாவளி பண்டிகைக்கு பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
55
Diwali School Holiday
அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. இதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு விடுமுறையாகி விடுகிறது. தீபாவளிக்கு மறுநாள் இந்த முறை அரசு பொது விடுமுறை அறிவித்ததை போன்று அக்டோபர் 21ம் செவ்வாய்கிழமை அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் முறை கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே குஷியில் துள்ளி குதிக்கின்றனர்.