நெருங்கும் புயல் சின்னம்.! ஒருவருக்கு இத்தனை பால் பாக்கெட் மட்டுமே- ஆவின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Nov 26, 2024, 1:47 PM IST

தமிழகத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து, மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஆவின் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும். ஒரு நபருக்கு குறிப்பிட்ட பாக்கெட்டுகளுக்கு மேல் பால் வழங்கப்படாது.

heavy rain

உருவானது புயல்

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக்கடல்  நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் தொடங்கி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், சென்னை என பல மாவட்டங்களில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

heavy rain in tamilnadu

பொறுப்பு அதிகாரிகள் நியமனம்

இதனையடுத்து தமிழக அரசு சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரக்கோணத்திலு தேசிய மீட்பு படையினர் டெல்டா மாவட்டங்களுக்கு புறப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மழை மற்றும் புயல் என்று வந்தாலே முதலில் தட்டுப்பாடு ஏற்படுவது பால் பாக்கெட் தான். இதன் படி ஏராளமாக மக்கள் 5முதல் 10 பால் பாக்கெட்களை ஒரே நேரத்தில் வாங்கி செல்வார்கள். இதனையடுத்து அனைத்து மக்களுக்கும் பால் பாக்கெட் கிடைக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை ஆவின் வெளியிட்டுள்ளது. அதன் படி, 

Tap to resize

Aavin

24 மணி நேரமும் இயங்கும் ஆவின் பாலகம்

எதிர்வரும் கன மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்க்கண்ட ஆவின் நவீன பாலகங்கள் 24 மணி நேரமும் இயங்க ஆவின் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

1. அம்பத்தூர் பால்பண்ணை கேட் பாலகம்

2. அண்ணாநகர் குட்நஸ் டவர் பூங்கா பாலகம்

3. மாதவரம் பால்பண்ணை பாலகம்

4. வண்ணாந்துரை பாலகம் மற்றும் பெசன்ட் நகர் பாலகம்

5. வசந்தம் காலனி பாலகம், அண்ணாநகர் கிழக்கு

6. சோழிங்கநல்லூர் பால்பண்ணை பாலகம்

7. விருகம்பாக்கம் பாலகம் (வளசரவாக்கம் மெகா மார்ட் அருகில்)

8. C.P.இராமசாமி சாலை பாலகம், மயிலாப்பூர்
 

aavin milk

 ஒருவருக்கு 4 பாக்கெட் பால்

எதிர்வரும் கன மழையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தங்குதடையின்றி ஆவின் பால் விநியோகம் நடைபெற மேற்கண்ட அனைத்து பாலகங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் பால் கிடைக்கும் வகையில் ஒருவருக்கு அதிகபட்சம்  4 பால் பாக்கெட் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்குதடையின்றி பால் விநியோகம்

மேலும் ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் ஆவின் பாலகங்களில் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில் பால் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் தேவைப்படும் பகுதிகளில் தற்காலிக விற்பனை நிலையம் அமைத்து ஆவின் பால் பவுடர் மற்றும் UHT பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Latest Videos

click me!