இந்த சூழலில் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, வரவிருக்கும் புயல் டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் அதி கனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.