புரட்டிப்போட போகுது பேய் மழை.! இனி தான் மெயின் பிக்சர்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர் மேன்

First Published | Nov 28, 2024, 11:27 AM IST

Heavy Rain Warning : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 29 முதல் மழை தீவிரமடைந்து, 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கனமழை பெய்யும்.

TAMILNADU RAIN

வடகிழக்கு பருவமழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்படவுள்ளது. இந்தநிலையில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 6 மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடித்தது.

Fengal Cyclone

இன்று மாலை உருவாகிறது புயல்

தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீட்டர்  தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அந்த வகையில் இந்த புயல் ஏற்கனவே சென்னை- புதுச்சேரி இடையை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் காற்றின் மாறுபாடு காரணமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணிக்கும் பாதை சற்று மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
 

Latest Videos


TAMILNADU RAIN

புயல் எங்கு கரையை கடக்கிறது

அதன் படி மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.இந்த புயலின் மையப்பகுதியான கண் புதுச்சேரி பகுதியில் இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தநிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்  வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் , இன்று டெல்டாவில் இருந்து சென்னைக்கு வரை பகல் மற்றும் இரவில் மிதமான மழை பெய்யும் பகலில் குளிர்ந்த காற்றை அனுபவியுங்கள் என தெரிவித்துள்ளார்.  
 

RAIN

டிசம்பர் 1,2 ஆம் தேதிகளில் கன மழை

நவம்பர் 29 ஆம் தேதியில் இருந்து மழை தீவிரம் அடையும் எனவும், 30ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கன மழை பெய்யும் என கூறியுள்ளார். மேலும் பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய கடற்கரைகளில் கனமழை இருக்கும் எனவும், டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில்  புல் எஃபெக்ட் மழை பெற முடியும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

click me!