Tamilnadu Rain: தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. பல்வேறு பகுதியில் தொடர்ந்து வெயில் சதம் அடித்து வருகிறது. நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், ஈரோட்டில் தலா 104, திருப்பூர் தருமபுரி, மதுரை விமான நிலையத்தில் தலா 102, திருச்சி, நாமக்கல்லில் தலா 102, கோவை மதுரை நகரத்தில் தலா 101, பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 100 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில் வெயிலுக்கு நடுவே இன்று முதல் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில், வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைக்குடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 21ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
36
டெல்டா மாவட்டங்களில் மழை
அதேபோல் 21 மற்றும் 23 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கடலோர டெல்டா மாவட்டங்கள் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் 24 மற்றும் 25ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
56
வெயில் அதிகரிக்கும்
இன்று முதல் 23ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
66
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.