இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் அல்லது மெட்ரோ ரயில் வளாகங்களில் இனி சத்தமாக பேசினாலோ அல்லது ஹெட்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் மொபைல் யூஸ் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இனி இந்த செயல்களை செய்யக் கூடாது
மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.