தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னையின் நிலை என்ன?

Published : Feb 26, 2025, 02:59 PM ISTUpdated : Feb 26, 2025, 03:05 PM IST

தமிழகத்தில் தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

PREV
16
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னையின் நிலை என்ன?
Heavy Rain

தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் பனிபொழிவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ , தங்கச்சிமடம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 3 செ.மீ மண்டபத்தில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

26
Tamilnadu rain

இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்குமா? அல்லது மழை பெய்யுமா? என்பது குறித்து சென்னை வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அதாவது  தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

36
Tamilnadu Heavy Rain

27ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  விஜய் ஒரு தலைவரே இல்லை! தவெகவை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை! பிரசாந்த் கிஷோர் சரவெடி!

46
tamil nadu weather update

28ம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம். சிவகங்கை, விருதுநகர் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:   பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை! போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

56
TN Rain Alert

மார்ச்1ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

66
Chennai weather

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories