Tamilnadu Rain: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நூற்றாண்டுகளுக்கு பெரும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பகல் மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
25
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
35
9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையை நோக்கி மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. இந்த மேகங்கள் வலுவாக இருப்பதால் இரவு சென்னைக்கு மிகவும் நல்ல மழையாக இருக்கம். நேற்று மதியம் தொடங்கி இரவு வரை வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் பரவலாக கனமழை பெய்திருந்தது.
55
தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சுற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும். மழை மேகங்கள் அடுத்த கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியை நோக்கி நகரும். டெல்டா முதல் பாண்டி வரையிலான கடலோர மாவட்டங்களில் இரவு தொடங்கி அதிகாலை வரை மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.