காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகையில் பள்ளிகளுக்கும், காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்டலில் சனிக்கழமை ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஞாயிற்றுக் கிழமை அதே பகுதியில் நிலவியது. இது திங்கள் கிழமை காலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மெதுவாக நகர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கள் கிழமை முதல் நவம்பர் 22ம் தேதி வரை கடலோர தமிழக மாவட்டங்களிலும், ஒருசில உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
24
ஆரஞ்ச் அலர்ட்
கனமழையை குறிக்கும் வகையில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
34
மஞ்சள் எச்சரிக்கை
மேலும் கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமக நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.