Magalir Urimai Thogai
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் மாதந்தோறும் ஒரு கோடியே 16 லட்சம் பேரின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ம் தேதி 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. ஆகையால் தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்களில் மகளிர் உரிமை தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Magalir Urimai Thogai Scheme
அவ்வப்போது மகளிர் உரிமை தொகைக்கான புதிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அந்த மக்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
Kalaignar Magalir Urimai Thogai
இதில் விண்ணப்பித்த அனைவரின் விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றவர்களின் மனுக்களை நிராகரிக்கவும் செய்யப்படுகிறது. குறிப்பாக அரசு நிர்ணயித்த தகுதிகளை பூர்த்தி செய்யாதவர்கள், முறையான தகவல்களை கொடுக்காதவர்களின் விண்ணப்பங்கள் எல்லாம் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
Magalir Urimai Thogai Guidelines
இந்நிலையில் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டும் உங்கள் அக்கவுண்டில் பணம் வரவில்லை என்றால், நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பழைய வங்கி கணக்காக இருக்கலாம். அதாவது, அந்த வங்கி கணக்கு செயலில் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு நீங்கள் முதலில் உங்கள் வங்கி கணக்கு எண் மீண்டும் செயல்படுத்த வங்கியை அணுக வேண்டும். முறையான ஆவணங்களை கொடுத்து வங்கி எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் புதிய வங்கி கணக்கை தொடங்கவும். அதன்பிறகு இ சேவை மையத்துக்கு சென்று வங்கி கணக்கு எண் மாற்றப்பட்ட விவரத்தை சொல்லி, பாஸ்புக் அப்டேட் செய்ய வேண்டும்.
magalir urimai thogai eligibility
அதுமட்டுமல்லாமல் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கும்போது உங்கள் விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது, பணம் எதனால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தெளிவான காரணத்தை அறிந்து, ஆவணங்களை சமர்பித்தால் உங்களுக்கான மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.