Student : பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களா நீங்கள்.! இந்த போன் அழைப்புகளை நம்ப வேண்டாம்- அரசு எச்சரிக்கை

First Published | Aug 8, 2024, 1:04 PM IST

மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் மற்றும் தங்களது User Name and Password-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 

college student

பொறியியல் படிப்பு சேர்க்கை

பி.இ. பி,டெக் படிப்பில் சேர அழைத்தால் மாணவர்கள் நம்ப வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தின் விண்ணப்பிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 9ஆயிரத்து 645 ஆகும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1,97,601 தகுதியான மாணாக்கர்களுக்கான தரவரிசை பட்டியல் 10.07.2024 அன்று வெளியிடப்பட்டது. 

Tamil Pudhalvan : மாணவர்கள் வங்கி கணக்கில் நாளைய தினமே 1000 ரூபாய்.! அதிரடியாக வெளியான அறிவிப்பு

Anna University registrar

தரவரிசை பட்டியல் வெளியீடு

இந்த தரவரிசை பட்டியல் வெளிப்படை தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாணாக்கர்களின் தரவரிசை எண்(Rank), விண்ணப்ப எண்(Application Number), பெயர்(Name), பிறந்த தேதி(Date of Birth). மதிப்பெண் (Aggregate Mark), வகுப்பு (Community) மற்றும் வகுப்பு தரவரிசை எண் (Community Rank) ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
 

Tap to resize

மாணவர்களின் தொலைபேசி எண்கள்

மேலும் இதில் மாணாக்கர்களின் தொலைபேசி எண்ணோ மற்றும் மாவட்ட விபரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மாணாக்கர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தரவரிசை தகவல்களை சில சமூக விஷமிகள் தங்களது சுயநலத்திற்காக வேண்டி தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டது தெரிய வருகிறது. இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88.34% பொருந்தவில்லை.
 

rank list

சைபர் கிரைமில் புகார்

இது தொடர்பாக சைபர் கிரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு கட்டமைப்பு firewall. secure socket layer certificate மற்றும் virtual private connection ஆகிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தகவல்கள் சிறிதளவும் கசியாவண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அழைப்புகள் நம்ப வேண்டாம்

மாணாக்கர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் மற்றும் தங்களது User Name and Password-யை யாரிடமும் பகிர வேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் எழும்பச்சத்தில் அருகில் உள்ள TFC மையத்தை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் மற்றும் 1800- 425-0110 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!