vegetable price hike
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்து சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலையானது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயம் விலை என்ன.?
பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி விலை என்ன.?
சௌசௌ ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், எலுமிச்சை ஒரு கிலோ 120க்கும், காலிபிளவர் ஒன்று 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது