இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் தொடரும் நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இன்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்றனர். டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள் மாலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கடலில் மீன்பிடிப்பு பணியின் போது இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியங்கள் குறித்து எடுத்துறைத்தனர்.
வெளியுறவுதுறை அமைச்சருடன் மீனவர்கள்
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயசங்கர், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளது துரதிஷ்டவசமான சம்பவம். அண்ணாமலையுடன் முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் வந்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை விளக்கி கூறினர். அவற்றில் சில வெளியுறவுத் துறை மற்றும் சில மீன்வளத்துறைக்கு தொடர்புடையது. இந்த ஆலோசனையில் மீன்பி தொழில் துறையின் செயலாளரும் கலந்து கொண்டார்.
அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள்
இதனை அரசியல் பிரச்சினையாகக் கருதக் கூடாது. மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினை. இதனை தீப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
மீனவர்கள் நலனில் மத்திய அரசு
மத்திய அரசும், மீனவர்களி்ன் நலனுக்காக பணியாற்றி வருகிறது. தற்போது 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவ சங்கங்களுடன் அரசு சார்பில் கூட்டம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.