Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Published : Jun 25, 2026, 11:54 AM IST

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது. 

PREV
16
பெண் குழந்தைகளுக்கான சிற்பான திட்டங்கள்.!

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நலனை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் (Chief Minister's Girl Child Protection Scheme) உள்ளது. 1992ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ₹50,000 அல்லது தலா ₹25,000 நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) செலுத்துகிறது. பெண் குழந்தைகளை சம உரிமையுடன் வளர்க்கவும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

26
திட்டத்தின் முக்கிய நோக்கம்

பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை குறைப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேசமயம் பெண் குழந்தைகளின் கல்வி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சம உரிமையை உறுதி செய்ய குடும்பங்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

36
யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தத் திட்டத்தில் சேர குடும்பத்தில் ஒரு அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் திட்டத்தின் பலன் கிடைக்காது. பெற்றோர் 40 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்தைத் தாண்டக்கூடாது. குழந்தை 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்தவர்களாகவோ இருக்க வேண்டும்.

46
திட்டத்தின் நிதி பலன்கள்

ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அவரது பெயரில் ₹50,000 FD முதலீடு செய்யப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ₹25,000 FD செய்யப்படும். 6ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுமார் ₹1,800 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், வட்டி சேர்த்து சுமார் ₹3 லட்சம் வரை முதிர்வுத் தொகையாக பெறும் வாய்ப்பு உள்ளது.

56
தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்கும் போது பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வயதுச் சான்றிதழ், குடும்பக் கட்டுப்பாடு (Sterilization) சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் தேவையெனில் ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

66
விண்ணப்பிக்கும் முறை

இந்தத் திட்டத்திற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO), குழந்தை மேம்பாட்டு அலுவலகம் அல்லது அருகிலுள்ள e-Sevai மற்றும் CSC மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் தகுதியை ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். விண்ணப்பக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய பொருளாதார ஆதரவாக அமைகிறது. குழந்தை பிறந்த சில ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து அரசின் இந்தச் சிறந்த நலத்திட்டத்தின் பலனைப் பெறுவது குடும்பங்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories