அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கையை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தனும், சரண்விடுப்பு ஒப்படைப்பினை மாற்றி அறிவிக்க வேண்டும். 7-வது ஊதிய குழு நிர்ணயம்செய்த பொழுது 21 மாத நிலுவைத்தொகையினை வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளதை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
24
அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விழா முன்பணம், கல்வி முன்பணம், திருமண முன்பணம் உயர்வு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அரசு ஊழியர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சங்கமான CPS ஒழிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியேற்றவர்களுக்கு, புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தினைக் கைவிட்டு, பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தக் கோரி,
34
அரசு ஊழியர்கள் இரு சக்கர வாகன பயணம்
தமிழ்நாடு அரசினை வலியுறுத்தும் வகையில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 05.05.2025 கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வாளையாறு முதல் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வரை மூன்று வழிகளில் நடைபெறும் இருசக்கர வாகன பிரச்சார இயக்க பயணம், 16.05.2025 அன்று சென்னையில் நிறைவடைகிறது.
அவ்வகையில், 16.05.2025 வெள்ளி அன்று, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு முதல்வர் மற்றும் மதிப்பிற்குரிய தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்திட உள்ளனர். 16.05.2025 அன்று காலை 10 மணியளவில் நந்தனம் கருவூல கணக்குத்துறை அலுவலகம் முன்பிருந்து சென்னை பிரச்சார இயக்க பயணம் துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.