இதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லேப்டாப்களில், திட்டத்தின் கருப்பொருளான “உலகம் உங்கள் கையில்” என்ற வாசகத்துடன், முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது அரசின் கல்வி நலத்திட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது.
ஆனால், சில மாணவர்கள் இந்த ஸ்டிக்கரை மறைத்து, அதன் மேல் நடிகர் விஜயின் புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். குறிப்பாக, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
இந்த சம்பவம் இணையத்தில் இருவிதமான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு இதை “தளபதி ரசிகர்களின் சம்பவம்” எனக் கொண்டாடி பகிர்ந்துகொண்டது. மறுபுறம், பலர் இது அரசு நலத்திட்டத்தை அவமதிப்பதாகவும், அரசியல் எதிர்ப்பின் வெளிப்பாடாகவும் விமர்சித்தார்கள். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவிப் பொருளை அரசியல் சின்னமாக மாற்றுவது சரியா என்ற கேள்வியும் எழுந்தது.