நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி, தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவையில் வங்கி மற்றும் ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கல்வியை முடித்தும், பல லட்சம் இளைஞர்கள் வேலை தேடி வருகிறார்கள். எனவே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
சென்னையில் மட்டும் வேலை வாய்ப்பை உருவாக்காமல் தமிழகம் முழுவதும் பரவலாக தொழிற்நிறுவனங்களை தொடங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்காக பயிற்ச்சிகள் வழங்கி கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
25
அரசு பணிகளுக்கான போட்டி தேர்வு
இதனால் சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. அடுத்ததாக தமிழக அரசு பணியில் சேர்வதற்காக இரவும் பகலுமாக இளைஞர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணிக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவிட இலவச பயிற்சி முகாமும் நடத்தப்படுகிறது.
இதே போல மத்திய அரசின் தேர்வுகளுக்கு தமிழக தேர்வர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற தேவையான உதவிகளையும் அரசு செய்து வருகிறது. தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கு(SSC, IBPS, RRB) பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
35
நான் முதல்வன் திட்டத்தில்
நான் முதல்வன் திட்டம் தமிழ்நாடு அரசால் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முதன்மையான திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்பு திட்டமாகும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உறுதி செய்வதாகும். மாணவர்களுக்கு தொழில்நுட்பம், ஆங்கில மொழி, நிரலாக்கம், பிளாக்செயின், வங்கியியல், மற்றும் போட்டி மதிப்பீடு போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2.2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சென்னையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 500 மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய அதிநவீன ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. மற்றும் ரெயில்வே தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சியானது சென்னை, சேலம், விருதுநகர் நகரங்களில் தமிழக திறன் மேம்பாட்டு கழகம், மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்கு கட்டணமின்றி பயிற்சி, உணவு, தங்குமிடம் வழங்கப்பட்டு வருகிறது.
55
இலவச பயிற்சிக்கு டெண்டர்
இந்தநிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவையில் மண்டலங்களில் வங்கி தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளுக்கு(SSC, IBPS, RRB) பயிற்சி அளிக்க பயிற்சி மையங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,
சென்னை மண்டலத்தில் 300 மாணவர்களுக்கும், மதுரை, கோவை மண்டலத்தில் தலா 350 மாணவர்களுக்கு கட்டணமின்றி தங்குமிடம், உணவு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் இலவசமாகவே பயிற்சி எடுப்பதோடு தங்கிபடிக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.