மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்குக் காரணமான நகை திருட்டு புகாரை அளித்த நிகிதா குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
25
யார் இந்த நிகிதா?
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபெருமாள் என்பவரின் மகள். ஜெயபெருமாள் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர். அவரது தாயார் சிவகாமி அரசு ஊழியர். நிகிதா முனைவர்' பட்டம் முடித்தவர். திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
35
திருமாறன் அதிர்ச்சி தகவல்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் நிகிதா குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்: நிகிதாவுக்கு தாலி கட்டிவிட்டதாலே என் மனைவியா? திருமணமான இரவே பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். வரதட்சணை வழக்கு போட்டு, குடும்பத்தை அலைக்கழித்தனர். என்னிடம் ரூ10 லட்சம் பெற்றுக் கொண்டுதான் விவகாரத்தே கொடுத்தார்.
இப்படி பலபேரை ஏமாற்றியவர்கள்தான் நிகிதாவும் அவரது குடும்பத்தினரும். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். திருமணங்களை செய்துவிட்டு அவர்களை காவல்துறை, நீதிமன்றம் என அலையவிட்டு அவர்களிடம் இருந்து ரூ10 லட்சம், ரூ.20 லட்சம் பறித்துவிட்டு விவகாரத்து தருவதுதான் இந்த கும்பலின் வேலை. இதேபோல வேலை வாங்கித் தருவதாகவும் பலரிடம் மோசடி செய்திருக்கிறது இந்த கும்பல்.
55
நகை காணாமல் போனதாக கூறுவது பொய்
நிகிதா தமது நகை காணாமல் போனதாக சொல்வது எல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கோவிலில் காவலாளி அஜித்குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அதற்காக அவர் மீது நகை திருட்டு பழியைப் போட்டிருப்பார். அஜித்குமார் கொலைக்கு அரசு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். நிகிதாவின் தந்தை துணை ஆட்சியராக இருந்தவர். தாயாரும் அரசுப்பணியில் இருந்துள்ளார். இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவது, ஏமாற்றி வந்தனர். மேலும், நிகிதா குடும்பத்தை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.