பள்ளி ஆசிரியர்​களுக்​கும் இலவச​மாக ஏஐ படிப்​பு​கள்.! ஐஐடி சொன்ன குட் நியூஸ்!

Published : Sep 11, 2025, 03:59 PM IST

School Teacher: சென்னை ஐஐடி, பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது. அக்​டோபர் 10ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்கலாம்

PREV
15
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. ஐடி உள்பட பல துறைகளில் ஏஐகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. ஏஐகளால் வேலை இழப்புகள் ஒருபக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளில் 99 சதவீத வேலைகள் ஏஐயால் பறிக்கப்படும் என்று பகீர் தகவலும் வெளியாகியுள்ளது.

25
இந்திய தொழில்நுட்பக் கழகம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான இலவச ஆன்லைன் படிப்புகளை தொடங்கவுள்ளது. வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் திறன்களை அவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். மத்திய அரசின் சுயம் பிளஸ் முயற்சியின் கீழ் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்​களுக்​கும் இலவச​மாக ஏஐ படிப்​பு​கள் வழங்கப்பட உள்ள​தாக சென்னை ஐஐடி அறி​வித்​துள்​ளது.

35
பள்ளி ஆசிரியர்​கள்

இது தொடர்​பாக சென்னை ஐஐடி​யில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இந்​தியா முழு​வதும் உள்ள அனைத்து வகுப்பு பள்ளி ஆசிரியர்​களுக்கு அனை​வருக்​கும் செயற்கை நுண்​ணறிவு (AI) படிப்​பு​களை சென்னை ஐஐடி விரிவுபடுத்​துகிறது. இந்த படிப்​பு​கள் சென்னை ஐஐடி பிர​வர்​தக் டெக்​னால ஜிஸ் அறக்​கட்டளை​யுடன் இணைந்து ஸ்வ​யம் பிளஸ் மூலம் ஆன்​லைன் முறை​யில் வழங்கப்​படு​கின்​றன.

45
செயற்கை நுண்​ணறிவு

முன்​னர் வழங்​கப்​பட்ட 5 படிப்​பு​களு​டன், ஆசிரியர்​களுக்​கான ஒரு புதிய பாடத்​திட்​டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்​தம் 25 முதல் 45 மணி நேரம் வரை கால அளவு கொண்ட இந்​தப் படிப்​பு, இலவச​மாக வழங்​கப்​படு​கிறது. சான்​றிதழ் பெற விரும்​புவோர், தேர்​வு​கள் மூலம் குறைந்த கட்​ட​ணத்​தில் பெறலாம். கற்​பித்​தல், மதிப்​பீடு மற்​றும் மாணவர் ஈடு​பாட்டை மேம்​படுத்​து​வதற்கு அத்​தி​யா​வசி​ய​மான செயற்கை நுண்​ணறிவு மற்​றும் நடை​முறை கருவி​களைப் பெற ஆர்​வ​முள்ள ஆசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கலாம்.

55
ஆன்​லைனில் விண்​ணப்​பிக்கலாம்

இந்​த படிப்​பு​கள், செயற்கை நுண்​ணறிவு கல்​வியை உள்​ளடக்​கிய​தாக​வும், அனைத்​துத் துறை​களி​லும் அணுகக் கூடிய​தாக​வும் அமைந்​திருக்​கும். இவை பொறி​யியல் மாணவர்​களுக்கு மட்​டுமல்​லாமல், கலை, அறி​வியல், வணி​கம் மற்​றும் பிற துறை​களைச் சேர்ந்த கற்​பவர்​களுக்​காக​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன. புதிய செயற்கை நுண்​ணறிவு பாடத்​ திட்​டத்​தை, ஐஐடி இயக்​குநர் காமகோடி கடந்த திங்​கள்​கிழமை தொடங்கி வைத்​தார். இதில் சேர விரும்​புவோர் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பை பயன்​படுத்தி அக்​டோபர் 10ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்கலாம் என கூறப்பட்டுள்​ளது.

Read more Photos on
click me!

Recommended Stories