அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொண்டார்.
மேலும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் முக்கிய நபராகவும் செயல்பட்டு வந்த வைத்திலிங்கம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியைக் கடுமையாக எதிர்த்து வந்தார். உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கடந்த சில காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் வைத்திலிங்கம் இன்று தன்னை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.