அமித் ஷா கையில் சிக்கிய குடுமி.. முதல்வர் கெத்துக் காட்டிய புதுகட்சிக்கு 2 சீட்டு..! முதல் தேர்தலே பனால்..!

Published : Jan 21, 2026, 10:00 AM IST

சார்லஸின் துடுக்குத் தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் எனவும் பகிரங்கமாக எச்சரித்தார். 

PREV
14
கெத்து காட்டிய புதுக் கட்சி

புதுச்சேரியில் தனது லட்சிய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் களமிறங்கிய வேகத்திலேயே புஷ்வாணமாகி விட்டதுதான் ஹாட் டாபிக்.

சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ரூ.1000 கோடியை லாட்டரி அதிபர் மகன் சார்லஸ் இறக்கி தேர்தலை சந்திக்க தயாராகி வந்தார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய 30 எம்எல்ஏ தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 30 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வாக்காளர்கள் வரை உள்ளனர். இங்கு எம்எல்ஏவாக வெற்றி பெற பெரிய கட்சிகளின் பின்புலமோ, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்தவர்களோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

24
ஆட்சியை பிடிக்க ரூ.1000 கோடி

புதுவையை பொருத்தவரை தொகுதியில் மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவராகவும், எளிதில் அணுக கூடியவராகவும் இருக்க வேண்டும். அடுத்தது தான் கட்சியை பார்ப்பார்கள். இந்நிலையில், புதுவையில் உள்ள 30 தொகுதியிலும் குறைந்த வாக்காளர்கள்தான் உள்ளனர். நீங்கள் முதல்வராக வந்துவிட்டால் அதிகாரம் வந்துவிடும்’’ எனக்கூறி அவரை அரசியலுக்கு அழைத்து வந்துவிட்டார் ஜான் குமார். பின்னர் சார்லஸ் ஜேசிஎம் மக்கள் இயக்கம் என ஆரம்பித்து, ஜான்குமார் தொகுதியான காமராஜர் தொகுதியில் தினமும் இலவச மதிய உணவு திட்டத்தையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சியாக மாற்றி புதுவையில் உள்ள 30 தொகுதியில் 15 தொகுதிகளை இலக்காக வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசை ஊழல் அரசு என பேசி வந்தார்.

தனது சொந்த பணம் ரூ.100 கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழை பெண்களுக்கு ஓய்வூதியம், 6 சிலிண்டர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு கிட், மாணவின் தாய்க்கு ரூ.20 ஆயிரம், 10 கிராம் தங்க நாணயம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ரூ.30 கோடிக்கு பல்வேறு திட்டங்கள் என ரூ. 1000 கோடியை செலவு செய்து வெற்றி பெற திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவரது கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர்.

34
ஒரே மாதத்தில் சிதைந்த முதல்வர் கனவு

இந்த வெளிநாட்டு மாப்பிள்ளை மாதிரியான கேரக்டேரெல்லாம் பண்ணமாட்டீங்களா? என்று ஒரு திரைப்படத்தில் கேட்பது போல கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருந்தார். அரசியல் ஒன்றும் லாட்டரி சீட்டு விற்பது மாதிரி சாதாரணம் அல்ல. அது வியாபாரமும் அல்ல. ஏற்கனவே, புதுச்சேரி களத்தில் பழம் தின்று கொட்டைப்போட்டவர்கள் டஜன் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பணத்தை மட்டுமே பலமாக வைத்து வளைத்துப் போட்டுவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்த சார்லஸ்சின் கனவில் திடீரென கிலோ கணக்கில் மண் விழுந்து விட்டது.

2026 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை ‘சிங்கப்பூராக மாற்றுவேன்’ என பீலா வாக்குறுதி அளித்து, வங்கக் கடலில் கட்சி கொடி அறிமுகம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்று அதிரடி காட்டிய லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கட்சி தொடங்கிய ஒரு மாதத்திலேயே பாஜக கூட்டணியில் இணைய உள்ளார். புதுச்சேரி அரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.

இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் ரங்கசாமி, தன்னை சந்திக்க வந்த மத்திய அமைச்சர்கள், தேசிய செயல் தலைவர் ஆகியோரிடம் சார்லஸின் துடுக்குத் தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் எனவும் பகிரங்கமாக எச்சரித்தார்.

44
அடக்கிய அமித் ஷா

அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆகியோரை டெல்லிக்கு அழைத்துப் பேசியுள்ளார். அமித் ஷா அறிவுறுத்தலின்பேரில் ஜோஸ் சார்லஸ் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

அத்தோடு ஜோஸ் சார்லஸ் டெல்லி சென்று பாஜக முக்கியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பாஜக கொடுத்த அழுத்தத்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி இணைவது உறுதியாகி இருக்கிறது. வரும் தேர்தலில் லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கிறது. காமராஜ நகர், நெல்லித்தோப்பு ஆகிய இரண்டு தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது ல.ஜ.க. கடந்த முறை 16 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் தற்போது 15 தொகுதிகளிலும், கடந்த முறை 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இந்த முறை 10 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என்று தெரிகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories