தமிழக அரசின் புதிய முயற்சியான “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” மூலம் பட்டதாரி இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி விவசாயிகளுக்கு உதவலாம். ரூ. 6 லட்சம் வரை மானியத்துடன் கூடிய இந்த திட்டம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாக “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று வேலை தேடி அலையும் பல இளைஞர்கள், இந்த சேவை மையங்கள் மூலம் சுயமாக தொழில் தொடங்கிக் கொண்டு, தங்களுக்கும், சமூகத்திற்கும் பயன்பட வாய்ப்பு பெறுகின்றனர்.
விவசாயிகளின் நலனையும், இளைஞர்களின் முன்னேற்றத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய பாதையைத் திறக்கிறது.
24
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்
இந்த மையங்கள் மூலம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, தொழில் தொடங்குவதற்கான நிதி உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இந்த திட்டம் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பட்டதாரி ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நவீன தொழில்நுட்பங்கள், மத்திய/மாநில அரசு அறிவுரைகள் போன்றவற்றை வழங்கும் சேவை மையங்களை நடத்துவதற்கான நிதி உதவி கிடைக்கிறது.
34
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்- நிதி உதவி
ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 20 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு மத்தியிலும் மாநில அரசும் சேர்த்து 30% மானிய உதவி வழங்குகிறது.
அதிகபட்ச மானியம் ரூ. 6 இலட்சம் வரை வழங்கப்படும்.
பயிற்சி:
மையத்தை நிறுவ விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். வணிகம் நடத்தும் திறன்களை வளர்க்கவும், விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகளை கற்றுத்தரவும் அரசு முன்னெடுப்பு எடுத்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைய விரும்புவோர் முதலில் விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தயாரித்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வேண்டிய இணைய முகவரி: https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register மேலும், QR Code வழியாகவும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தின் சிறப்பு:
இது ஒரு சாதாரண வேலை வாய்ப்பு திட்டமல்ல. பட்டதாரிகளின் தொழில் முனைவு திறன்களை வளர்க்கும், விவசாயத் துறைக்கு புதுமையான சேவைகளை கொண்டு வரும் முயற்சி என்பதே இதன் சிறப்பு அம்சமாகும். இந்த திட்டத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்பினை மட்டும் அல்லாது, கிராமப்புறங்களில் தொழில் சூழலை உருவாக்கவும் உதவுகிறது “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்” என்பது பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகவும், விவசாயிகளுக்கு நம்பிக்கையின் விளக்காகவும் திகழ்கிறது.