விவசாயிகள் பயிர்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் அந்த வகையில், விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் மற்ற மக்கள் சோற்றில் கை வைக்க முடியும். அந்த வகையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையயில், விவசாயிகள் பயிர்கள் வாங்க, கால் நடைகள் வாங்க வங்கிகளில் கடன் பெற்று அதனை உரிய வகையில் செலுத்தி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக விவசாயிகள் கடன் பெற சிபிஸ் ஸ்கோர் தேவை என அறிவிப்பு வெளியானது. இதனால் வங்களில் விவசாயிகள் கடன் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து சிபில் ஸ்கோர் நடைமுறையை கை விட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தது.
25
கடன் பெற சிபில் ஸ்கோர்
இதனிடையே தமிழக அரசு விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையில், பயிர் கடன் கால்நடை பராமரிப்பு கடனுக்கு சிபில் ஸ்கோர் கேட்கப்படாது என்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் தொடர்பாக கடந்தாண்டு பின்பற்றப்பட்ட நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. பயிர்கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்துவோருக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியி்ல்லா கடனானது ‘சிபில்’ ஸ்கோர் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
35
சிபில் ஸ்கோர் - கூட்டுறவு வங்கி அறிவிப்பு
இந்நிலையில், கடன் தொடர்பாக அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,‘‘ ஏற்கெனவே கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு தொடர்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இருப்பினும், இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக்கடன் வழங்குவதில் இடர்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களால் தெரிவிக்கப்பட்டது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்தாண்டுகளில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக்கடன் வழங்குதலில் பின்றபற்றப்பட்ட நடைமுறைகளையே நடப்பு ஆண்டிலும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே கடன் பெற சிபில் ஸ்கோர் தேவையில்லை என கூறியுள்ளது. இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் எளிய முறையில் கடன் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடர்பாக கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு மாத காலமாக விவசாயிகள் வாங்குகின்ற பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் பார்ப்பது பெரிய சிக்கலாகி பல இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
55
முதலமைச்சருக்கு நன்றி
கடன் தேவைப்படும் விவசாயிகள் கடன் பெற முடியாமல் இரண்டு மாதங்களாக தவித்துக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளுடைய பிரச்சனையை உணர்ந்து நடைபெற்ற போராட்டங்களுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இனிமேல் சிபில் ஸ்கோர் மற்றும் வங்கி தடையின்மை சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்திருப்பதை வரவேற்கின்றோம்.
தமிழகத்தில் இருக்கின்ற விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். விவசாயிகள் மற்றும் எங்களுடைய போராட்டங்களுக்கு செவி சாய்த்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.