இலவச வேட்டி சேலை : புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களின் நிலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல்கள் இங்கு உள்ளன. வேட்டி சேலை வாங்காதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு.
அரசின் திட்டங்கள், சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில், புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்துள்ளனர். அவர்களில் தகுதியான நபர்களை கண்டறிந்து புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் தனித்தனியாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதனை வீடு வீடாக சென்று சரிபார்த்து கண்டறியப்பட்டு வருகிறது. தவறான தகவலை கொடுத்து விண்ணப்பித்த ரேஷன்கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
24
பொங்கல் பரிசு தொகுப்பு
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டது. மேலும் இலவச வேட்டி சேலையும் விநியோகிப்பட்டது. இதில் பல லட்சம் பேர் பொஙு்கல் பரிசு தொகுப்பை பெறவில்லை.
34
இலவச வேட்டி சேலை
இந்த நிலையில் இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 77 இலட்சத்து 22 ஆயிரம் எண்ணிக்கையிலான வேட்டிகள் மற்றும் 1 கோடியே 77 இலட்சத்து 64 ஆயிரம் எண்ணிக்கையிலான சேலைகள் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,224 நியாய விலைக்கடைகளில் ஜனவரி 9 தேதி முதல் முதல் 13.1.2025 வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
44
இலவச வேட்டி சேலை- கால அவகாசம் நீட்டிப்பு
இந்த பணியை சரிவர மேற்கொள்ள சுமார் 50,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சூழ்நிலையில் பொங்கல் வேட்டி சேலை வாங்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கிடும் வகையில் ஏற்கனவே பிப்ரவரி 28ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேட்டி சேலை வாங்காத பயனாளிகள் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.