ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் கட்டத் தேர்தல் நடத்தப்படுவதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடித்து 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
24
Ramjan
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளின் தேதியை மாற்றி அமைக்குமாறு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பெற்றோர் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதனப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
34
School Exam
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு /அரசு உதவிபெறும்/ தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தேர்வுகளை நடத்தி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்'என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
44
School Education Department
உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.