முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்போர்ட்ஸ் பைக்கில் கருப்பு சிவப்பு உடை அணிந்து கெத்தாக கொடுத்த போஸ் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது இளம் வயதில் எடப்பாடி பழனிசாமி புல்லட் பைக்கில் எடுத்துக் கொண்ட போட்டோவுக்கு சேலஞ்ச் விடும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்தில் மிகவும் இளமையாகவும், துடிப்புடனும் காணப்பட்டார். அப்போது அவருக்கு ஆஃப்ரோ ஸ்டைலில் நீண்ட முடி, மீசை, இளமை ததும்பும் முகம் இருந்தது. சென்னை மேயராக இருந்தபோது, திமுக இளைஞர் அணி தலைவராக இருந்தபோது (பாடி லாஸாக இருந்நாலும்) மாஸ் தோற்றத்தில் இருந்தார். மு.க.ஸ்டாலினின் ஸ்டைல் பெரும்பாலும் எளிமை தன்மையுடன் திராவிட இயக்க பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. தளபதி என்று அழைக்கப்படும் அவர், பொதுவாக கருப்பு-வெள்ளை கலவையில் உடை அணிவதை விரும்புபவர்.