Published : Sep 06, 2025, 11:25 AM ISTUpdated : Sep 06, 2025, 11:35 AM IST
அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார் செங்கோட்டையன். கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆனால் அதிமுகவில் அதிகார மோதலால் பரிதவித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் சுமார் 9 வருடங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என தனித்தனி அணியாக உள்ளனர். தேர்தல் களத்தில் வாக்குகள் சிதறி எதிராக போட்டியிடும் அணிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்து வருகிறது. எனவே நீக்கப்பட்ட அதிமுக தலைவர்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல அதிமுகவினரும் கூறி வருகிறார்கள்.
24
அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்கனும்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அதிமுகவில் 3 பேரை இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக தெரிவித்துவிட்டார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என ஓபிஎஸ் கூறிய பிறகும் இது காலம் கடந்த செயல் என தட்டி கழித்து வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் வேதனையில் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் தான் அதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுக மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், இன்னும் 10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு பணியை தொடங்க வேண்டும் என கெடு விதித்தார். அப்படி ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளவில்லையென்றால் தாமே மற்ற நிர்வாகிகளோடு இணைந்து அதற்கான பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
34
செங்கோட்டையன் மீது இபிஎஸ் அதிருப்தி
செங்கோட்டையனின் பேட்டி அதிமுகவினர் மத்தியில் ஒரு தரப்பில் வரவேற்பை பெற்றாலும், மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தலைமைக்கே கெடு விதித்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு கொடுத்தது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
44
செங்கோட்டையன் மீது நடவடிக்கை.?
செங்கோட்டையன் பேட்டியால் கடும் கோவத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை மற்ற நிர்வாகிகள் சமாதானம் படுத்தியதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து செங்கோட்டையனை தற்காலிகமாக நீக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும், ஆனால் இதனை மற்ற நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
எனவே செங்கோட்டையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் மட்டும் தற்போது அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் செங்கோட்டையனின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.