அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக, அதிமுக கூட்டணி வைத்துள்ளன.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் இன்று இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று இரவில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.