ஆஹா சூப்பர் அப்டேட்! மழையை அனுபவியுங்கள்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

Published : Aug 18, 2025, 08:36 AM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

PREV
15
தென்மேற்கு பருவமழை

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. இது தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்பபோது கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேபோல் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடிக்கடி லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வருகின்ற 19 ஆம் தேதி மாலையில் தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

35
தமிழ்நாடு வெதர்மேன்

இதன் காரணமாக, வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

45
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மழை மேகங்கள் காஞ்சிபுரத்தை கடந்து சென்னை நோக்கி வலுவடைந்து வருகின்றன. சென்னையின் பல பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யும். புயல்கள் நீண்ட தூரம் நீண்டு, பாண்டிச்சேரி மற்றும் கடலூர் வரை கூட சிறிது நேரம் வீசக்கூடும். மழையை அனுபவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

55
அற்புதமான மழை பெய்யும்

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பல பகுதிகளில் மீண்டும் ஒரு அற்புதமான மழை பெய்யும். இப்போது தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் அடுக்குகளிலிருந்து நாரா நாரா தூறல் தொடரும். KTCC-யின் சில பகுதிகளில் தினசரி மழை பெய்யும் போக்கு தொடரும். லீவர்டு பகுதிகளின் பிற பகுதிகள் பெரும்பாலும் அமைதியாகவும் வறண்டதாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை காசிமேட்டில் 49.5 மில்லி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை பரந்தூரில் 21.2 மில்லி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூரில் 25.6 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories