அமைச்சர் செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டும் அமலாக்கத்துறை! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் சோதனை!

Published : Mar 06, 2025, 03:54 PM ISTUpdated : Mar 06, 2025, 03:56 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு புகார் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.

PREV
14
அமைச்சர் செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டும் அமலாக்கத்துறை! திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் சோதனை!

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக  அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பரான எம்சிஎஸ் சங்கர், கொங்கு மெஸ் சுப்பிரமணி, சக்தி மெஸ் கார்த்திக் உள்ளிட்டோரின் வீடு அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன்  சோதனை நடைபெற்று வருகிறது. 

24
TASMAC Head Office

அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத்துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில்  தாளமுத்து நடராஜர் மாளிகையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகம், சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் நிறுவனத்திலும், ஆயிரம் விளக்கில் உள்ள எஸ்.என்.ஜே மதுபான நிறுவனத்தின் அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள Kals Distilleries உள்ளிட்ட மதுபான நிறுவனங்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!

34
ED Raid

இந்த 3 நிறுவனங்களும் டாஸ்மாக் நிறுவனம் மதுபானம் கொள்முதல்  செய்யும் முக்கிய நிறுவனங்களாகும். டாஸ்மாக்கிற்கு மதுபானம் விநியோகம் மற்றும் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

44
Enforcement Directorate

அதேபோல் மின்வாரியத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கண்வேயர் பெலட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கன்வேயர் பெல்ட்டுகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கடந்த 2023ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் மின்வாரியத்தில் ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது . சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வெங்கட்ரத்தனம் சாலையில் வசித்து வரும் மின்வாரிய மூத்த அதிகாரி காசி என்பவர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories